கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா.? இந்த ஒரு ஜூஸ் குடிங்க போதும்..



What benefits in neem juice

அறுசுவைகளில் மருத்துவ குணம் கொண்ட சுவைதான் கசப்பு சுவை. கசப்பு சுவை கொண்ட உணவுகள் பலருக்கும் பிடிக்காமல் போகும். ஆனால் இதுதான் மருத்துவ குணம் கொண்ட உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் கூறப்பட்டு வருகிறது.

Neem

இந்த வகையில் கசப்பு சுவையுடைய மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையை பல நோய்களுக்கும் மருந்தாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த வேப்பிலையை சாறு எடுத்து குடித்து வந்தால் கல்லீரல் பலப்படும் என்று கூறுகின்றனர்.

கல்லீரலில் நச்சுக்கள் சேர்ந்து இருந்தால் அவை நம் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும். இந்த நச்சுக்களை நீக்க வேப்பிலை ஜுஸ் அரு மருந்தாக பயன்பட்டு வருகிறது.

Neem

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்து நன்றாக கழுவி விட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்து வந்தால் கல்லீரல் மட்டுமல்லாது மற்ற உடல் உறுப்புகளுக்கும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். இந்த ஜூஸை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அருந்தலாம்.