ஆயுளை மேம்படுத்தும்.. அன்றாட நடைப்பயிற்சி.! இதை கவனத்தில் கொள்ளுங்கள்.!



what-are-benefits-of-walking

நடைப்பயிற்சியின் நன்மைகள் :

பலருக்கு காலையில் எழும்போதே மிகவும் சோம்பலாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில், அன்றைய நாளை துவங்க முடியாமல் சலித்துக் கொள்வார்கள். இந்த சலிப்பை போக்கி உத்வேகத்துடன் பணிகளை ஆரம்பிக்க பெரிதளவில் உதவக்கூடியது நடை பயிற்சி. நடைப்பயிற்சியானது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.

நடைப்பயிற்சி செய்வதன் மூலம் இதயத்தின் செயல்பாடு மேம்படுவதுடன், இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தூரம் செல்லும். மேலும், நடைப்பயிற்சி செய்வதனால், இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. சர்க்கரையின் அளவினை நாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டுமெனில்,மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது நடைப்பயிற்சி தான்.

இதையும் படிங்க: காஃபியை இப்படி குடித்தால், கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. ட்ரை பண்ணினா அசந்துடுவீங்க.!

walk

இது உடலின் மெல்ல இன்சுலின் சுரப்பை ஏற்படுத்துகிறது.மேலும், நல்ல செரிமானத்திற்கும் வழிவகுக்கிறது. உடல் எடை அதிகமாகி ஹார்மோன் பிரச்சனைகள், நீர்கட்டிகள் பிரச்சனைகள், நீண்ட நாள் கருத்தரிப்பு தள்ளி போதல் என அனைத்திற்கும் பரிந்துரைக்கப்படுவது நடைபயிற்சியே. 

அதிக எடையினால் மூச்சு திணறல், மூட்டு வலி போன்ற பிரச்சனை நடைப்பயிற்சியின் மூலம் சரியாகின்றது. நோய்எதிர்ப்பு சக்தியினை மேலும் பலப்படுத்த நிச்சயம் நடைப்பயிற்சி இன்றியமையாதது. 

எப்படி செய்யலாம்.? 

நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து விட்டு ஆரம்பித்தால், அது நம்முடைய உடல் உறுப்புகளுக்கு மேலும் நலன் சேர்க்கும். மிதமான வேகத்தில் சிறிது இடைவெளி எடுத்து நாம் நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். 

வயதானவர்கள் மற்றும் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மிக வேகமாக மூச்சு முட்ட கஷ்டப்பட்டு நடக்காமல், தண்ணீர் அருந்தி முறையாக இடைவெளி விட்டு நடைப்பயிற்சி செய்யவேண்டும். சரியாக தண்ணீர் எடுத்துக்கொள்ளாமல் நாம் உடலுக்கு வேலை கொடுத்தால் உடலின் இயக்கம் பாதிப்பதுடன்.. டீஹைட்ரேட் ஆகி.. பல்வேறு கோளாறுகளுக்கு அது வழி வகை செய்யும். எனவே, கவனமாக இருங்கள்.!

இதையும் படிங்க: "உசுரு முக்கியம்... " காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்.!! மருத்துவர்கள் எச்சரிக்கை.!!