உடல் எடையை குறைக்க நினைப்போர் செய்ய வேண்டியது என்ன?.. ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!

உடல் எடையை குறைக்க நினைப்போர் செய்ய வேண்டியது என்ன?.. ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!



Weight Loss Persons TIps 

 

இன்றளவில் பலரும் உடல் எடை சார்ந்த பிரச்னையுடன் இருந்து வருகின்றனர். இது இளம்பருவத்தில் எந்த விதமான தடையையும் தரப்போவதில்லை எனினும், பிற்காலத்தில் ஏற்படும் அதீத உடல் எடை கட்டாயம் பிரச்சனையை தரும். 

உடல் எடையை குறைக்க நினைப்போர்,  நொறுக்குத்தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும். நொறுக்குத்தீனி அதிகம் எடுத்துஒண்டால் உடல் எடை கட்டாயம் அதிகரிக்கும். தொலைக்காட்சி அல்லது செல்போன்களை பார்த்தபடி இல்லாமல், ஸ்கிப்பிங் செய்தல், நடனம் ஆடுதல், மாடிப்படியில் ஏறி இறங்குதல் போன்றவை செய்ய வேண்டும். 

தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தல் உடலில் இருந்து 120 கலோரி வெளியேற உதவும். ஆகையால் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்கு நடந்து சென்று வரலாம். உணவு எடுத்துக்கொண்ட பின்னர் சிறிது நடைபயணம் மேற்கொள்ளலாம். 

உணவு சாப்பிடும்போது மெதுவாக அதனை உட்கொள்வது, நன்கு மென்று உணவை விழுங்கி சாப்பிடுவது நல்லது. இதனால் உணவும் விரைந்து செரிமானம் அடையும். உணவு சாப்பிடுவோர் அதில் கட்டுப்பாடு கொண்டு, பசிக்க பசிக்க சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமான சாப்பாடு கூடாது.