விலங்குகள் போல் நடந்து செல்லும் அதிசய மீன்..! 2000 அடிக்கு கீழ் நடக்கும் வினோதம்..! வைரல் வீடியோ.

விலங்குகள் போல் நடந்து செல்லும் அதிசய மீன்..! 2000 அடிக்கு கீழ் நடக்கும் வினோதம்..! வைரல் வீடியோ.



Walking frog fish found 2000 feet below sea level

இந்த உலகில், நமது கண்களுக்கு தெரியாத பலவிதமான உயிரினங்கள் வாழந்துவருகிறது. அதுவும், கடலில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்துவருகிறது. கண் இல்லாத உயிரினம், புறா தலைபோல் முக அமைப்பு கொண்ட மீன் இப்படி பலவிதமான உயிரினங்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், கடல் மட்டத்தில் இருந்து, சுமார் 2000 அடிக்கு கீழ், நடந்துசெல்லும் வினோத மீன் பற்றிய வீடியோ ஓன்று வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

தவளையின் தோற்றத்துடன் சற்று ஒத்துப்போகும் இந்த மீன் இனமானது, தவளை மீன் என அழைக்கப்படுகிறது. பொதுவாக தவளைகள் நிலத்தில் தாவி தாவி செல்லும் பண்பு கொண்டது, ஆனால் இந்த மீன் விலங்குகள் போல் தனது கால் போன்ற அமைப்பை கொண்டு நடந்து செல்கிறது.