வீட்டிலேயே சுவையான, மனமனக்கும் வாழை இலை கிளி பரோட்டா செய்வது எப்படி?..! 

வீட்டிலேயே சுவையான, மனமனக்கும் வாழை இலை கிளி பரோட்டா செய்வது எப்படி?..! 


Vazhai Leaf Kili Parotta

 

இன்றளவில் உள்ள பல பரோட்டா கடைகளில் சிக்கன், மட்டன் சால்னாவை வைத்து கிளி பரோட்டா என்ற வாழைப்பழ இலையில் புதுவிதமான பரோட்டா தயார் செய்யப்படுகிறது. இதனை தயார் செய்யும்போது, அதன் மனமே நமது பசியை தூண்டிவிடும். இன்று கிளி பரோட்டாவை வீட்டில் செய்வது எப்படி என காணலாம்..

தேவையான பொருட்கள்:
வெஜிடபிள் குருமா - 3 கிண்ணம்,
பரோட்டா - 3,
வாழை இலை - 1,
வெங்காயம் (நறுக்கியது) - 1,
கொத்தமல்லி, எண்ணெய் - சிறிதளவு.

Vazhai Leaf  Parotta

செய்முறை: 
முதலில் எடுத்துக்கொண்ட வாழை இலையை அடுப்பு தீயில் காண்பித்து, லேசாக சூடேற்றி எடுக்க வேண்டும். பின் இலையை பிரித்து முதல் பரோட்டாவை எடுத்து வைக்கவும்.

ஒரு பரோட்டாவிற்கு ஒரு கப் வீதம் பரோட்டாவை முதலில் வைத்து பின்னர் குருமா ஊற்றி இடையில் வெங்காயத்தையும் தூவிக்கொள்ளவும். இறுதியில் கொத்தமல்லி தழை மற்றும் வெங்காயத்தையும் சேர்த்து தூவலாம்.

பின்னர் பக்குவமாக வாழை இலையை மடித்து வாழை நார் கொண்டு இலைகளை கட்டி அடுப்பின் மீது வைத்து, சிறிதளவு எண்ணெய் சேர்த்து பாத்திரத்தை வைத்து மூடிவிடவும். பின், சிறிது நேரம் கழித்து தோசை போல திருப்பி வைத்து எண்ணெய் சேர்த்து மூட வேண்டும். 

இவ்வாறாக 5 நிமிடம் முதல் 10 நிமிடத்திற்குள் மிதமான தீயில் வேகவைத்து எடுத்தால் சுவையான வாழை இலை கிளி பரோட்டா தயார்.