முட்டை வேகவைக்கும் போது இப்படி செஞ்சி பாருங்க.. அசந்து போவீங்க.!

முட்டை வேகவைக்கும் போது இப்படி செஞ்சி பாருங்க.. அசந்து போவீங்க.!



Tips to egg boiling 

முட்டையை வேக வைக்கும் போது முட்டையில் வெடிப்பு ஏற்படுவதால் அது பொங்கி கரு வெளியே வர காரணமாக அமைகிறது. இதனால்அந்த முட்டையை சாப்பிட முடியாத அளவிற்கு வீணாகிவிடும். அப்படி முட்டை வெடிக்காமல் வேக வைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதிகப்படியானோர் முட்டைகளை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கின்றனர். ஆனால் அப்படி செய்வது தவறு. முட்டையை அறை வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் முட்டையை எடுத்து சிறிது நேரம் வெளியில் வைத்து அறை வெப்ப நிலைக்கு கொண்டு வந்து அதன் பின் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.  

Egg

நேரடியாக சமைக்க பயன்படுத்தினால் முட்டை வெடித்து விடும். வாயுக்கள் வெப்பமடைந்து விரிவடைவதால் அழுத்தம் ஏற்பட்டு முட்டை ஓட்டில் விரிசல் ஏற்படுகிறது.  

முட்டைகளை வேக வைக்கும் போது அடுப்பை பற்ற வைப்பதற்கு முன்பாகவே தண்ணீரில் முட்டையை போட்டு அதில் ஒரு டீஸ்பூன் உப்பு போட்டு வேக வைக்கலாம். 8 நிமிடங்களுக்கு வேகவைத்து பின்னர் முட்டையை எடுத்து உறித்து சாப்பிடலாம். அதிக முட்டைகளை ஒரே நேரத்தில் வேக வைப்பது கூட முட்டை உடைய காரணமாக அமையும். 

Egg

சிறிய பாத்திரத்தை முட்டை வேக வைக்க பயன்படுத்தினால் மூன்று அல்லது நான்கு முட்டைகளுக்கு மேல் அதில் போடக்கூடாது. அதிக முட்டைகளை வேக வைக்க வேண்டும் என்றால் பெரிய பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். அல்லது ஒரு தேக்கரண்டி வினிகரை முட்டை வேகும் பாத்திரத்தில் போட்டால் முட்டை உடைவதை தடுக்கும். இது மற்ற குறிப்புகளை விட அதிக பலன் அளிக்க கூடியது. 

அடுத்ததாக முட்டை வேக வைக்க ஐஸ் கட்டிகளை பயன்படுத்தலாம். இப்படி ஐஸ்கட்டி சேர்த்து முட்டையை 8 முதல் 10 நிமிடங்களுக்கு வேகவைத்து, அதன்பின், முட்டையை வேறொரு தண்ணீர் இருக்கும் பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். 2-3 நிமிடங்கள் கழித்து முட்டையை உறித்து பயன்படுத்தலாம்.