கிராமத்து சுவையில் சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி...

கிராமத்து சுவையில் சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வது எப்படி...



 Sundaikai vathal kulambu recipe

நவீன மயமான உலகில் வாழும் நாம் இன்று என்னதான் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு வந்தாலும் கிராமத்து சுவையில் சமைக்கூடிய உணவுகள் அனைத்தும் தனிச்சுவையில் தான் இருக்கும்.

அந்தவகையில் கிராமத்து ஸ்டைலில் சுவையான வத்தல் குழம்பு செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
புளி – எலுமிச்சைப்பழ அளவு,

மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன், 
சில்லி பவுடர் – அரை ஸ்பூன்,

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், 
உப்பு – தேவையான அளவு, 
கடுகு – அரை ஸ்பூன், 
சீரகம் – அரை ஸ்பூன், 
வெந்தயம் – அரை ஸ்பூன்,

வெல்லம் சிறிய துண்டு – 1,

சுண்டைக்காய் வத்தல் – 3 ஸ்பூன்,

அரிசி மாவு – ஒரு ஸ்பூன்,

நல்லெண்ணெய் – 50 கிராம்,

கருவேப்பிலை – ஒரு கொத்து,

கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி.

Sundaikai vathal kulambu

முதலில் புளியை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த புளி கரைசலில் 2 ஸ்பூன் மிளகாய்த் தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் சில்லி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் கடாயை வைத்து அதில் 50 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துப் பொறிக்க வேண்டும்.

பின்னர் சுண்டைக்காய் வத்தல் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள குழம்பு கரைசலை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவேண்டும். குழம்பு மிளகாய் தூள் வாசனை மறைந்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை குழம்பை கொதிக்க விட வேண்டும். கடைசியாக ஒரு டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் வெல்லத்தை சேர்த்து ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். கொதித்த பின்னர் கைப்பிடி கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.