கோடை வெயிலின் சூட்டை குறைக்க வேண்டுமா? இந்த பழங்கள் போதும்!Summer season fruits

பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மனிதர்கள் பலரும் பழங்களை தான் அதிக அளவில் விரும்புகின்றனர். அந்த வகையில் கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் பழங்கள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Summer Season

முலாம் பழம்

கண் பார்வையை அதிகரிக்க கூடிய ஆற்றல் முலாம்பழத்திற்கு உண்டு. இதில் நிறைந்துள்ள நீர் சத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. மேலும் முலாம் பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது.

தர்பூசணி பழம்

தர்பூசணி பழம் முழுக்க முழுக்க தண்ணீரால் நிறைந்துள்ளது. எனவே கோடை காலத்தில் மிக சிறந்த பழம் என்றால் அது தர்பூசணி பழம் தான். இதில் நிறைந்துள்ள சத்துக்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

Summer Season

இளநீர்

வெயில் காலத்தில் சிறந்த தானம் என்றால் அது இளநீர் தான். இரவே காலை வேளையில் வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், உடல் சூடு குறைந்து ஆரோக்கியமாக இருக்கலாம். குறிப்பாக வயிறு சம்பந்தமான பிரச்சினைகளையும் போக்கும்.

நுங்கு

கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் நுங்கு தாகத்தை தணிப்பதுடன், உடல் சூட்டில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. நுங்கில் நிறைந்துள்ள நீர் சத்து இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.