கோடை காலத்தில் குளிர்ச்சியாக வைக்கும் உதவும் 5 பழங்கள்.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

கோடை காலத்தில் குளிர்ச்சியாக வைக்கும் உதவும் 5 பழங்கள்.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!



Summer colling fruits

கோடை காலத்தில் நாம் அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன பழங்களை சாப்பிடலாம் என்பது குறித்து பல இடங்களில் தேடி வருகிறோம். அதிலும் குறிப்பாக கோடைகாலத்தில் நம்முடைய உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் பழங்களை தேடி தேடி சாப்பிடுகிறோம்.

எனவே, கோடை காலத்தில் நம்முடைய உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நாம் கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Summer juice

அன்னாசி பழம்

அன்னாசி பழம் கோடைகாலத்தில் சாப்பிட வேண்டிய பழங்களின் மிகவும் முக்கியமான ஒன்று. இந்தப் பழத்தில் 86 சதவீதம் வரை நீர் சத்து நிறைந்துள்ளது. கோடை காலத்தில் நமக்கு அதிக அளவில் தேவைப்படுவது இந்த நீர் சத்துதான். எனவே கோடைகாலத்தில் அண்ணாசி பழம் சாப்பிடுவது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

தர்பூசணி

கோடைகாலம் தொடங்கி விட்டாலே, தர்பூசணி பழத்தின் சீசனும் தொடங்கிவிடும். இந்த பழத்தை நாம் கோடை காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனென்றால், தர்பூசணி பழத்தில் அதிக அளவு நீர் சத்து நிறைந்துள்ளது. எனவே நமது உடலை மிகவும் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

பப்பாளி பழம்

கோடைகாலத்தில் நமது உடலை பளபளப்பாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பப்பாளி பழத்தில் 88 சதவீதம் வரை நீர்ச்சத்து நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summer juice

கிர்னி பழம்

கிர்ணி பழம் வெயில் காலத்தில் கட்டாயம் அனைவரும் சாப்பிட வேண்டிய முக்கிய பலமாக உள்ளது. ஏனென்றால் இந்த பழத்தில் நீர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் இந்த பழத்தில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது.

திராட்சை பழம்

திராட்சை பழத்தில் 81% வரை நீர் சத்து நிறைந்துள்ளது. எனவே கோடைகாலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்களில் இதுவும் ஒன்று. அதேபோல் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் இந்த பழத்தை அதிகமாக சாப்பிடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.