ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
வெள்ளை சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம் இதில் உடலுக்கு ஆரோக்கியமானது எது? விளக்கும் இதய நிபுணர்....
நமது அன்றாட வாழ்க்கையில் அதிகமாக பயன்படுத்தப்படும் சர்க்கரை தான் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு காரணம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் சர்க்கரை தவிர்க்கப்பட்டாலும், அதற்கு மாற்றாக நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
சர்க்கரையின் ஆபத்துகள்
மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, சர்க்கரை ஒரு 'ஸ்லோ பாய்சன்'. இது உடல் பருமன், நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், கொழுப்பு கல்லீரல், பிசிஓடி போன்ற பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் சர்க்கரை ஒரு வில்லனாகக் கருதப்படுகின்றது.
நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் குறித்து நிபுணர் கருத்து
இதய நோய் நிபுணரான டாக்டர் அரவிந்து துருவாசல் தனது சமூக வலைதள பதிவில், வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தப்படுவது ஆரோக்கியமானது என்று பொதுவாக நினைக்கப்படுவதாக கூறியுள்ளார். ஆனால் உண்மையில் இதில் ஹீரோ எதுவும் இல்லை. உண்மையான ஹீரோ 'நோ சுகர் அல்லது லோ சுகர்' தான் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கடலூரில் உள்ள கோவிலில் தீ மிதித்த குக் வித் கோமாளி புகழ்! பக்தி மயமான தருணம்! இணையத்தில் செம வைரலாகும் வீடியோ..
ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வு
சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம் எது இருந்தாலும் அதை குறைந்த அளவில் பயன்படுத்தினாலே உடல்நலத்திற்கு பயன் தரும். 'லோ சுகர்' தான் ஆரோக்கியமான தேர்வு என டாக்டர் அரவிந்து துருவாசல் விளக்கமளித்துள்ளார்.
மொத்தத்தில், சர்க்கரை எவ்வாறு இருந்தாலும் அதனை குறைத்துக்கொள்வதே நல்ல ஆரோக்கியத்திற்கு சிறந்த வழி என்பதை மக்கள் உணர வேண்டும்.
இதையும் படிங்க: முதலையை தில்லாக வட்டமிட்டு சுற்றிவந்த சுறா! இறுதியில் முதலை சுறாவுக்கு கொடுத்த அதிர்ச்சி! வைரலாகும் திகிலூட்டும் வீடியோ காட்சி...
