கைகளை தட்டுவதால் இத்தனை நன்மைகளா? முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!



So many benefits of clapping hands

ஆரோக்கியத்தை தேடி எங்கெங்கோ சென்று, ஏதேதோ செய்கிறோம். ஆனால் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி நம் கைகளிலேயே உள்ளது. இது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? 

பொதுவாக மற்றவர்களை பாராட்ட அனைவருமே கைகளை தட்டுவோம். இவ்வாறு தட்டுவது மற்றவர்களை உற்சாகப்படுத்துவதுடன், நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. 

கைகளை தட்டும் பழக்கமானது நமது இளம் பருவத்திலிருந்தே தொடங்குகிறது. பிறந்தநாள் வாழ்த்தில் தொடங்கி, வெற்றி பெற்றவரை உற்சாகப்படுத்துதல், குழந்தைகளை ஊக்கப்படுத்துதல், மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல், நண்பர்களை கேலி செய்தல் போன்ற பல விஷயங்களில் கை தட்டும் பழக்கத்தை நமக்கே தெரியாமல் ஏற்படுத்தியுள்ளோம். 

தினசரி கைகளை தட்டுவதால், நமது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது, நமது மனநலமும் மேம்படுகிறது. 

கைகளை தட்டுவதால் ஏற்படும் பலன்கள்:

கைகளை தட்டுவது ஒருவிதமான உடற்பயிற்சி முறையாகும். 

இரண்டு உள்ளங்கைகளையும், விரல்களையும் ஒன்றாக சேர்த்து தட்டுவதால், கைகளில் உள்ள மெரிடியன் புள்ளியானது தூண்டப்பட்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 

 தினமும் காலை நேரங்களில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை கைகளை தட்டுவதால், நேர்மறையான மனநிலை ஏற்பட்டு, நாள் முழுவதும் உங்களை உற்சாகமான மனநிலையில் வைத்திருக்கும். 

இந்த கைகளை தட்டும் உடற்பயிற்சியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமமின்றி செய்யலாம். 

தினசரி கைகளை தட்டுவதால், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுக்குள் வைக்க முடியும். 

மேலும் கைகளை தட்டும்போது ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது. 

இது சுவாசம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. 

தலைவலி, டென்ஷன், கவலை போன்ற நேரங்களிலும் இந்த உடற்பயிற்சியை நீங்கள் செய்யலாம். 

நீங்கள் மிகவும் கோபமாக இருக்கின்றீர்கள் என்றால், இந்த உடற்பயிற்சி உங்களுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும். இது உங்கள் கோபத்தை குறைப்பதோடு, நேர்மறை எண்ணத்தையும் அதிகரிக்கச் செய்யும். ஏனெனில் கைகளை தட்டுதல் என்பது பொதுவாகவே பாராட்டுதல், ஊக்குவித்தல் போன்ற நேர்மறை சிந்தனையின் வெளிப்பாடாகவே உள்ளது. 

உங்களுடைய பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில், மிகவும் எளிதான கைகளை தட்டும் உடற்பயிற்சிக்கு சிறிது நேரம் ஒதுக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.