மருத்துவம் லைப் ஸ்டைல்

தூங்கும்போது படுக்கையில் புரண்டு புரண்டு படுப்பவரா நீங்கள்? இதை கொஞ்சம் படிங்க!

Summary:

Sleeping problems and solutions in tamil

தூக்கம் நமது உடலுக்கு மிகவும் முக்கியமான ஓன்று. மனிதன் உணவு இல்லாமல் கூட பல நாட்கள் வாழ முடியும். ஆனால், சரியான தூக்கம் இல்லாவிட்டால் அது நமது உயிருக்கே உலை வைத்துவிடும். நாம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்றால் ஆரோக்கியமான தூக்கமும் மிகவும் அவசியம்.

பொதுவாக மனிதன் 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இரவில் குறைவான நேரம் தூங்குவதால் அடுத்த நாள் உங்கள் மனதும், உடலும் புத்துணர்ச்சியை இழந்து மன அழுத்தத்திற்கு உட்படுகிறது. இதனால் மற்றவர்கள் மீது தேவை இல்லாத வெறுப்பு, கோவம் போன்றவை வர இதுவே காரணம்.

அதேபோல சிலர் இரவு 12 மணிக்கு படுக்கைக்கு சென்றுவிட்டு மறுநாள் காலை 8 மணி 9 மணிக்கு எழுந்துவிட்டு நாம் 8 மணி நேரம் உறங்குகிறேன் என்பார்கள். இப்படி சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழாமல் இருப்பதும் கூட ஒருவகையில் பிரச்சனைதான்.

அதேபோல, பெரும்பாலனோர் செய்யும் தவறு என்னவெனில் தூக்கம் வரவில்லை என்றால் தூக்க நிலைகளை மாற்றி மாற்றி புரண்டு கொண்டே இருப்பது. உண்மையில் இது ஒரு தவறான செயலாகும். இதுபோன்ற சமயங்களில் தொடர்ந்து படுத்திருக்காமல் எழுந்து வெளியே சென்று கொஞ்ச நேரம் வேறு வேலையில் ஈடுபடுங்கள். பிறகு வந்து தூங்குங்கள்.

இப்படி தூங்கும் நேரத்தில் சீரான உறக்கம் இல்லாவிட்டாலும் அதுவும் நமது உடலுக்கு கெடுதலே.


Advertisement