எந்தெந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் தெரியுமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க...



sleep-duration-by-age-in-tamil

அனைத்து வயதினருக்கும் தேவையான தூக்க நேரம்

தூக்கம் என்பது ஒருவரின் முழுமையான ஆரோக்கிய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். தினசரி நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதைப் பொருத்தே, நம்முடைய உடல் மற்றும் மன நலனில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, தூக்கத்தின் அளவு வயதிற்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

தூக்க நேரம்

தூக்கத்தின் முக்கியத்துவம்

இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லாமல் இருந்தால், அடுத்த நாள் முழுவதும் சோர்வாகவும், ஒருசில சமயங்களில் உடல் நலக் குறையுடன் வாழ நேரிடும். எனவே, ஒவ்வொரு வயதினரும் தங்களுக்கு ஏற்ற வகையில் தூங்க வேண்டும்.

தூக்க நேரம்

பிறந்த குழந்தைகளுக்கான தூக்க நேரம்

0 முதல் 3 மாதங்கள்: தினமும் 14 மணி முதல் 17 மணி நேரம் தூக்கம் தேவையானது

இதையும் படிங்க: பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தில் இவ்வளவு ஆபத்து உள்ளதா? அவசியம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க...

4 மாதங்கள் முதல் 1 வயது வரை: 12 மணி முதல் 15 மணி நேரம் தூங்க வேண்டும்

தூக்க நேரம்

சிறுவர்களுக்கான தூக்கம்

1 முதல் 2 வயது: 11 மணி முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும்

3 முதல் 5 வயது: 10 மணி முதல் 13 மணி நேரம் தூக்கம் அவசியம்

6 முதல் 12 வயது: 9 மணி முதல் 11 மணி நேரம் தூங்க வேண்டும்

தூக்க நேரம்

இளையோருக்கான தூக்க நேரம்

13 முதல் 18 வயது: தினமும் 8 மணி முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும்

தூக்க நேரம்

பெரியவர்களுக்கான தூக்கம்

18 முதல் 64 வயது: 7 மணி முதல் 9 மணி நேரம் தூக்க நேரம் போதுமானது

தூக்கம் என்பது சீரான வாழ்விற்கான அடிப்படை. வயதிற்கேற்ப தூங்கும் நேரத்தை சரியாக வைத்துக்கொள்வது, நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ உதவும்.