உலகை ஆளும் பிளாஸ்டிக்கை தவிர்க்க.. சாத்தியப்படும் மாற்று வழிகள் இதோ.! 



say no to plastic

காலையில் பல் துலக்கும் பிரஷ் முதல், தினசரி நாம் தொடும் பல பொருட்கள் வரை பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் ஆனவைதான். புவியில் உள்ள இயற்கை சத்துக்களையும் கனிம வளங்களையும் உறிஞ்சி, பிளாஸ்டிக் பொருட்கள் நீண்டகாலத்தில் இயற்கைக்கும் மனிதனுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. மளிகை, உணவு, மருந்து என அனைத்தும் பிளாஸ்டிக்கில் மூழ்கியுள்ள இக்காலத்தில் அதன் விளைவுகள் உலகம் முழுவதும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

பிளாஸ்டிக் பொருள்கள் மக்குவதற்கு நூறாண்டுகளுக்கு மேலாகும். அவை மண்ணில் கலந்து மாசு ஏற்படுத்தி, புவி வெப்பமயமாதல், கடல் மாசு, மேக வெடிப்பு, சுனாமி, கணிக்க முடியாத மழை அளவு போன்ற பல இயற்கை மாற்றங்களுக்கு காரணமாகின்றன. எனவே பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உடனடியாக பயன்பாட்டுக்கான புதிய வழிகளை நாம் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

முன்னோர் வாழை இலை, துணிப்பை போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி வாழ்ந்தனர். ஆனால் இன்று மலிவான விலையில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் வசதியில் நாமும் சிக்கி விட்டோம். இவை குறைந்த விலை கொண்டிருந்தாலும், அதில் உள்ள ரசாயனங்கள் உடல் நலத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக சூடான உணவுகளை பிளாஸ்டிக் தட்டுகளில் பரிமாறும்போது அதிலிருந்து வெளிவரும் ரசாயனங்கள் ஹார்மோன் கோளாறுகள், குழந்தையின்மை, உடல் பருமன் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பளபளமுகத்துக்கு.. இனி பார்லர் வேண்டாம்..பாலே போதும்.!

plastic

வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டு பொருள்கள், அழகு சாதனங்கள், வாகன உதிரிகள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் தான். இதனை மாற்ற அரசும், தனியார் நிறுவனங்களும், பொதுமக்களாகிய நாமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மிட்டாய் உறை, பேனா, எண்ணெய் டப்பா, மசாலா பொருள் பேக்கிங், விளம்பர பதாகைகள் போன்றவற்றை அட்டை, அலுமினியம் அல்லது சணல் பொருட்களால் மாற்றம் செய்யலாம்.

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களைத் தடை செய்து, கண்ணாடி, உலோகம், அலுமினியம் போன்ற மாற்றுப் பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். அத்தகைய நல்ல நடைமுறைகளை பின்பற்றும் அமைப்புகளுக்கு அரசு பாராட்டும், வெகுமதியும் வழங்கலாம். 

நாமும் வீட்டில், பணியிடத்தில், நம் பிள்ளைகளிடமும் இயற்கை வழியில் வாழும் பழக்கத்தை உருவாக்கி, சணல் பை, காகிதப்பை, கண்ணாடி பாட்டில்கள், இலை தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்துவோம். இதன் மூலம் நம் பிந்தைய தலைமுறைக்கு ஆரோக்கியமான புவியையும், இயற்கை வளங்களையும் பரிசாக அளிக்கலாம்.

இதையும் படிங்க: பளபளமுகத்துக்கு.. இனி பார்லர் வேண்டாம்..பாலே போதும்.!