பளபளமுகத்துக்கு.. இனி பார்லர் வேண்டாம்..பாலே போதும்.!



glowing-face-no-more-parlors-just-milk-is-enough-PX46RY

அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தை செலவழிப்பதை விட, நம் வீட்டில் இருக்கின்ற பாலுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும்போது இயற்கையானமுறையில் பின் விளைவுகளற்ற பளபளப்பான சருமம் கிடைக்கிறது. அவை, எப்படியென பார்க்கலாம் வாங்க. 

பால் என்பது முகத்திற்கு நல்ல க்ளென்சராகவும், ஈரப்பதத்தை மேம்படுத்தும் மாய்சரைசராகவும் செயல்படுகிறது. மேலும், முகத்திலுள்ள அழுக்குகளை நீக்கி, வறட்சியை நீக்கி ஈரப்பதம் தருகிறது. பாலில் கால்சியம், வைட்டமின்கள், லாக்டிக் அமிலம் போன்ற உயர்ந்த சத்துக்கள் உள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி, மருவற்ற சருமம் கிடைக்க வழிவகுக்கிறது. மேலும், நாம் வெளியில் செல்கையில் முகத்தில் தூசி, மாசு மற்றும் அழுக்கு போன்றவை முகத்தில் நேரடியாகப்பட்டு முகத்தின் பொலிவை கெடுக்கிறது.

milk

இதைத் தடுக்க, காய்ச்சாத பாலினை சிறிய காட்டன் துணியில் நனைத்து, மசாஜ் செய்து, 5 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவிவிட வேண்டும். இதன் மூலம் முகத்தில் உள்ள மாசுக்கள் நீக்கப்படுகின்றன. முகம் இழந்த பொலிவினை திரும்ப பெற சிறிதளவு காய்ச்சாத பாலுடன், தேன் கலந்து மாஸ்க்காக பயன்படுத்தி வர நல்ல மாற்றம் இருக்கும். 

இதையும் படிங்க: வாயை சுற்றிலும் கருமையா.? இதை செய்தால் போதும்.. பளீரென ஆகிவிடும்.!

முகத்தில் உள்ள கருமை மற்றும் சுருக்கங்களை நீக்க பாலுடன் சிறிதளவு கடலை மாவை கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் காய விடவேண்டும். பின்பு குளிர்ந்த நீரினைக்கொண்டு முகத்தை கழுவும் பொழுது அதில் இருக்கின்ற ஆன்டி ஆக்சிடென்ட்கள் மூலம் முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். இதே முறையில் பாலுடன் முல்தானி மிட்டியும் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிங்க: பளபளமுகத்துக்கு.. இனி பார்லர் வேண்டாம்..பாலே போதும்.!