சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்ற இந்த தண்ணீர் போதும்.!?Remedies for cure kidney problems

உடலில் தேங்கியிருக்கும் நச்சுகள்

பொதுவாக நம் உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்களை வியர்வை, மலம், சிறுநீர் வழியாக நம் உடல் உடனடியாக வெளியேற்றிவிடும். ஆனால் ஒரு சிலருக்கு உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்கள் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். குறிப்பாக சிறுநீரகத்தில் தேங்கி இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற முடியாமல் சிறுநீரக கற்கள் சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் இதனை இயற்கை வழியாக வெளியேற்ற கொத்தமல்லி தண்ணீர் பெரிதும் உதவுகிறது. கொத்தமல்லி இலை தண்ணீர் வேறு என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்றும், எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை குறித்தும் பார்க்கலாம்.

Coriander leaves

நச்சுகளை வெளியேற்றும் கொத்தமல்லி இலை 

உணவில் வாசனைக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. கொத்தமல்லியில் ஆண்ட்டி மைக்ரோபையல், ஆண்ட்டிடிரஸன், ஆண்டிமூட்டஜெனிக், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் போன்றவைகளை கொண்டுள்ளது. இந்த பண்புகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. குறிப்பாக சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக எளிதாக வெளியேற்றுகிறது.

இதையும் படிங்க: செரிமான பிரச்சனை முதல்.. உடல் எடை அதிகமாவது வரை.! பல நோய்களை தீர்க்கும் நெல்லிக்காய் ஜூஸ்.!?

கொத்தமல்லி

தண்ணீர் தயாரிக்கும் முறைமுதலில் கொத்தமல்லி இலைகளை எடுத்து நன்றாக அலசி ஈரம் போக காய வைத்துக் கொள்ளவும். பின்னர் அதை சிறிது சிறிதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஆற வைத்து லெமன் ஜூஸ் மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடித்து வரலாம். இவ்வாறு குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக பிரச்சனை எளிதில் குணமாகும்.

Coriander leaves

கொத்தமல்லி

இலை தண்ணீர் வேறு என்ன நோய்களை குணப்படுத்தும்?

கொத்தமல்லி இலை தண்ணீர் குடித்து வந்தால் செரிமானத்தை சரி செய்து செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு கொத்தமல்லி இலை தண்ணீர் வரப் பிரசாதமாக இருந்து வருகிறது. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. கொத்தமல்லி இலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் இதனை தண்ணீராக குடிக்கும் போது நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீர்படுத்தி பாக்டீரியா வைரஸ் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகள்யுடைய கொத்தமல்லி இலையை தினசரி உணவு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

இதையும் படிங்க: தைராய்டு பிரச்சனையா.! சின்ன வெங்காயத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க போதும்.!?