கால்சியம் சத்து நிறைந்துள்ள கேழ்வரகு லட்டு.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?..!!



ragi sweet laddu

கேழ்வரகில் அதிகளவு கால்சியம் நிறைந்துள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அத்துடன் கேழ்வரகு சாப்பிடுவதால் பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும்.

தேவையான பொருட்கள் :

நெய் - 2 தேக்கரண்டி 
கருப்பு எள் - 1 தேக்கரண்டி 
திராட்சை - 1 தேக்கரண்டி 
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை 
முந்திரி - 1 தேக்கரண்டி 
வெல்லம் - 1 கப் 
கேழ்வரகு மாவு - 1 கப் 
சுக்குத்தூள் - 1 சிட்டிகை

செய்முறை :

★முதலில் வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.

★பின் கருப்பு எள்ளை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும்.

★அடுத்து நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து வைக்க வேண்டும்.

★இறுதியாக கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஏலக்காய் தூள், சுக்குத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக உருட்ட வேண்டும்.

★அவ்வளவுதான் சுண்ணாம்பு, இரும்பு, புரதம் நிறைந்த கேழ்வரகு லட்டு தயாராகிவிடும்.