"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
எலும்பு தேய்மானம் ஏற்படாமல் பாதுகாக்கும் கேழ்வரகில் ரிப்பன் பகோடா.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!
உடலுக்கு சத்தான கேழ்வரகில் ரிப்பன் பக்கோடா எவ்வாறு வீட்டிலேயே செய்வது என்பதை தற்போது காணுவோம்.
கேழ்வரகில் அதிக கால்சியம் சத்து உள்ளதால், வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதில் ட்ரிப்டோபான் அமினோ அமிலம் இருப்பதால் பசியை கட்டுப்படுத்துகிறது.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - கால் கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
ஓமம் - சிறிதளவு
உளுந்து மாவு - 3 தேக்கரண்டி
கேழ்வரகு மாவு - ஒரு கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் கேழ்வரகு மாவை சலித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் கடாயை வைத்து அதில் உளுந்தை வறுத்து மிக்ஸியில் போட்டு பொடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
★அடுத்து ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, பொடித்து வைத்த உளுந்து மாவு, கேழ்வரகு மாவு, ஓமம், தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து முறுக்கு மாவு போல கெட்டியாக பிசையவும்.
★தொடர்ந்து ரிப்பன் பக்கோடா செய்யும் அச்சில் மாவை வைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிழிந்து நன்கு வெந்தவுடன் எடுக்க வேண்டும்.
★அவ்வளவுதான் சுவையான மொறு மொறு கேழ்வரகு ரிப்பன் பக்கோடா நிமிடங்களில் தயாராகிவிடும்.