செல்போனில் ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த பதிவு!!

செல்போனில் ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த பதிவு!!


Problems of watching movies in smart phones

மனிதனின் 6 வது விரலாக மாறிவிட்டது ஸ்மார்ட் போன். சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள்வரை அனைவரும் இன்று செல்போன் இல்லாமல் இருப்பது இல்லை. அந்த அளவிற்கு அடிமனையாக மாற்றிவிட்டது தொழில்நுட்பமும் அதன் வளர்ச்சியும்.

ஸ்மார்ட் போன்களின் அதிகளவு பயன்பாட்டிற்கு முக்கிய காரணம் அதிவேக இணையசேவை. அமர்ந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் பார்க்க, தெரிந்துகொள்ள உதவுகிறது இந்த இணையதளம். இதன் பயன் அதிகளவில் இருந்தாலும், அதனால் ஏற்படும் ஆபத்துகளும் அதிகளவில் உள்ளது.

குறிப்பாக ஆபாச படம். ஆபாசம் என்றால் என்னவென்றே தெரியாத பருவத்தினரைக்கூட ஆபாசப்படம் பார்க்க தூண்டுகிறது இந்த இணையம். இதனால் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்துள்ளது. பாலியல் ரீதியான குற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்த ஆபாச வலைத்தளங்களால் உங்களுக்கே பெரிய தலைவலியாக மாறிவிடும்.

Smart phones

நீங்கள் ஆபாசப் படங்கள் பார்க்கும் இணைய தளங்களில் வெளியிடப்படும் டிக்கர்கள் மூலம் தேவையில்லாத வைரஸ்கள் ஆட்டோமேட்டிக்காக உங்கள் தொலைபேசியில் டவுன்லோடு ஆகிவிடும்.

வங்கிக் கணக்கு அப்ளிகேஷன்கள் போன்ற முக்கிய ஆவணங்களைப் பயன்படுத்தும் அதே போனில் ஆபாசப் படங்களை பார்க்கும் போது உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய பர்சனல் தகவல்கள் மற்றும் போட்டோக்கள் ஆகியவை இதன் மூலம் திருடப்படுகின்றன. எனவே இனியாவது ஸ்மார்ட் போனில் ஆபாச படம் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.