நீண்ட ஆயுட் காலம் வாழ ஆசையா? அப்படினா இதை கண்டிப்பாக படியுங்கள்!!

நீண்ட ஆயுட் காலம் வாழ ஆசையா? அப்படினா இதை கண்டிப்பாக படியுங்கள்!!


play-this-sports-you-can-live-lot-of-days

உலகிலுள்ள மக்கள் அனைவர்க்கும் தான்அதிகநாள் வாழவேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கிறது. இதில் யாரும் வில்திவிளக்குகள்ல. நீண்ட நாள் வாழ்வதற்கு விளையாட்டில் மிக முக்கியத்துவம் குடுக்க வேண்டும். 

tamilspark

உடல் ஆரோக்கியம் பெற உடற்பயிற்சி மட்டும் செய்ய வேண்டும் என்பதுதில்லை. சிறந்தவை என்ற பட்டியலின் கீழ், எந்தவொரு விளையாட்டையும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. 

அதேசமயம் ஆயுள் நீட்டிக்க உதவும் விளையாட்டுகள் குறித்து தெளிவாக கூற இயலும். ஆம். சமீபத்திய ஆய்வுகளின் படி, இறப்பிற்கான வாய்ப்பை 47% அளவிற்கு குறைக்கும் விளையாட்டு இருக்கத் தான் செய்கிறது. 

இதுகுறித்து கன்சாஸ் நகரில் இருக்கும் செயிண்ட் லூக் சுகாதார மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் 8,577 இளைஞர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு நேரடி ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அதன்படி, உடற்பயிற்சி செய்யாதவர்களை விட, டென்னிஸ் போன்ற குழு விளையாட்டுகளை விளையாடுவோர் நீண்ட ஆயுளைப் பெறுவது தெரியவந்துள்ளது. 

tamilspark

இவர்கள் குழு விளையாட்டுகளைத் தவிர்த்து, தனித்து செய்யும் ஓட்டப் பயிற்சி, ஸ்விம்மிங், சைக்கிளிங் போன்றவற்றில் ஈடுபடுவோரை விட அதிக ஆயுளைப் பெறுகின்றனர். மயோ கிளினிக் புரொசீடிங்ஸில் சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை ஆனது, சமூகத்தில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கிறது.

இதனை மேற்கொண்ட ஜேம்ஸ் ஓ கீபே கூறுகையில், பிறருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது போன்று, உடற்பயிற்சி செய்து இதயத்தை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்று தெரிவித்தார். சைக்கிளிங் அல்லது ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவோர் குழுவினராக செயல்பட்டால், அதிக நாள் வாழலாம் என்று கூறப்படுகிறது.