உடலுக்கு நன்மையளிக்கும் பாசிப்பருப்பு அல்வா.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?.!!



pasiparupu hawa recipe

உடலுக்கு நன்மைளியக்கும் பாசிப்பருப்பு அல்வா எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

பாசிபருப்பில் உடலுக்கு நன்மையளிக்கும் பல சத்துக்கள் அடங்கியுள்ளது. வாரம் 2 முறை உண்பதால் உடல் வலிமை பெறுகிறது. மேலும், குழந்தைகள் சாப்பிடுவதால் எலும்பு பலம்பெற உதவுகிறது.
 
தேவையான பொருட்கள் :

பால் - 1 கப் 
தண்ணீர் - 2 கப் 
பாசிப்பருப்பு - 1 கப் 
வறுத்தரவை - கால் கப் 
நெய் - 4 தேக்கரண்டி 
முந்திரி - தேவைக்கேற்ப 
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி 
சர்க்கரை - ஒன்றறை கப்

செய்முறை :

★முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி வடிகட்டி குக்கரில் சேர்த்து ஈரப்பதம் இல்லாமல் வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு நெய் சேர்த்து வறுக்க வேண்டும். 

★பின் அதனுடன் இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்க வேண்டும். குக்கரில் நான்கு விசில் போட்டு பருப்பு வெந்ததும் மூடியை திறந்து, வெந்த பருப்பை கரண்டியை வைத்து நன்கு மசித்து கொள்ளவும். 

★அதனுடன் ஒரு கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த பால் கலந்து, சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். 

★இறுதியாக அடுப்பை பற்றவைத்து, ஒரு பேன் வைத்து 2 தேக்கரண்டி நெய் விட்டு, அதில் முந்திரி பருப்புகளை போட்டு பொன்னிறமாக வறுத்து, பாசிப்பருப்பை ஊற்றி கிண்டிகொண்டே இருக்க வேண்டும். 

★கிண்டும் போது பருப்பு அல்வா பதத்திற்கு கெட்டியாக வரும். அவ்வளவுதான் ருசியான பாசிப்பருப்பு அல்வா தயாராகிவிடும்.