செரிமானம், உடல் எடை மட்டுமா... கோடையின் வரப்பிரசாதம் பப்பாளி.. அசத்தல் டிப்ஸ் இதோ.!



Papaya Benefits in Summer: Boost Digestion, Immunity & Weight Loss Naturally

பப்பாளி நன்மைகள் குறித்த தகவல் இத்துடன் விரிவாக இணைக்கப்பட்டுள்ளது.

வெயில் கொளுத்தியெடுக்கும் கோடையில் உடலுக்கு குளிர்ச்சி, ஆற்றல், ஊட்டச்சத்துக்கள் அவசியமான ஒன்றாகும். இந்த காலத்தில் பப்பாளி சுவையான பழமாக மட்டுமல்லாமல், நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தரும் உணவாகவும் கருதப்படுகிறது. நீர்சத்து அதிகம், வைட்டமின், தாது நிறைந்து காணப்படுவதால் கோடைக்கு ஏற்ற பழம் இது ஆகும்.

செரிமானம், சோர்வுக்கு நல்லது:

பப்பாளி பழத்தில் 85% நீர் இருப்பதால், இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். கோடையில் ஏற்படும் வெப்ப நீரிழப்பை ஈடு செய்யவும் உதவும். வியர்வையால் இழந்த திரவங்களை சரிசெய்து, எலக்ட்ரோலைட்களை உடலுக்கு கொடுத்து சோர்வு, நீரிழப்பை தடுக்கும். பப்பாளியில் இருக்கும் பாப்பைன் நொதி செரிமானத்தை மேம்படுத்தும். இயற்கை நொதி புரதத்தை ஜீரணிக்க உதவும். இதனை தொடர்ந்து சாப்பிடும்போது மலச்சிக்கல், வாயுத்தொல்லை, அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சனையில் இருந்தும் விடுதலை தரும். நார்சத்து குடலை சுத்தப்படுத்தும். 

இதையும் படிங்க: Cough Problems: குளிர்காலத்தில் சளி, இருமல் தொல்லையா? நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்.! 

Papaya

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

பப்பாளியில் இருக்கும் வைட்டமின் சி, ஏ ஆற்றலை வழங்கும் சிறந்த மூலங்கள் ஆகும். இது கோடையில் ஏற்படும் நோய்த்தொற்றை குறைக்க உதவி செய்யும். உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, பருவகால நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும். கோடைகாலத்தில் கடுமையான சூரிய ஒளி, வியர்வை வெளிப்பாடு, சருமம் கருமையாதல், முகப்பரு போன்றவை ஏற்படும். பப்பாளியில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட், வைட்டமின் சி சருமத்துக்கு ஊக்கம் அளிக்கும். முக சுருக்கத்தை குறைக்கும். இயற்கையான பொலிவு தரும்.

உடல் எடை கட்டுப்பட நல்லது:

உடல் எடையினை கட்டுப்படுத்தும் விஷயத்தில் பப்பாளி பெரும்பங்கு வகிக்கிறது. கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இதில் இருக்கும் என்பதால், வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். அடிக்கடி பசியான உணர்வு தடுக்கப்பட்டு உடல் எடை கட்டுப்பட உதவும். காலை நேரத்தில் பப்பாளியை உணவாக எடுத்துக்கொள்வது சிறந்தது ஆகும். இது செரிமானத்தை மேம்படுத்தும். பசியை கட்டுப்படுத்த மதிய உணவுக்குமுன் 30 நிமிடங்கள் கழித்து பப்பாளியை சாப்பிடலாம்.

இரவு நேரத்தில் பப்பாளியை தவிர்க்கலாம். கர்ப்பிணிகள் பழுக்காத பப்பாளியை சாப்பிட வேண்டாம். 

இதையும் படிங்க: Green Banana: பச்சை வாழைப்பழம் கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. என்னென்ன நன்மைகள்? தெரிஞ்சிக்கோங்க..!