வீட்டில் கட்டாயம் அகற்ற வேண்டிய பொருட்கள்.. புத்தாண்டுக்கு பின் இதை மறந்துடாதீங்க..!



New Year Home Cleansing Items You Must Remove to Attract Prosperity

இந்து சாஸ்திர முறைகளின்படி, புத்தாண்டு முடிந்த பின்னர் கட்டாயம் வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவை குறித்து தெரிந்துகொள்ளலாம்.

வாஸ்து சாஸ்திரம் மற்றும் இந்து சாஸ்திரத்தின் கீழ், புத்தாண்டு முடிந்த பின்னர் சில பொருட்கள் வீட்டில் இருந்து அகற்றப்பட்டு இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து வீட்டில் வைத்துக்கொண்டே இருப்பதால், எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். மேலும், வீட்டில் செல்வம் தாங்காது. 

துளசி செடிகள்: 

சாஸ்திரத்தின் படி வாடிய துளசி செடிகளை வீட்டில் வைக்க கூடாது. இது துரதஷ்டத்தை தரலாம். லட்சுமி அருளை தடுக்கும். பழைய துளசி செடியை அகற்றிவிட்டு புதிய செடியை நடலாம். துளசியை வீட்டின் கழிவறை, குளியலறைக்கு அருகிலும் வைக்க வேண்டாம்.

சேதமான கடவுள் சிலைகள் / படங்கள்:

சேதமடைந்து காணப்பட்ட கடவுள் படங்கள் / சிலைகளை வீட்டில் வைப்பது நல்லதில்லை. இவை வீட்டின் எதிர்மறை சக்தியை ஏற்படுத்தி, நேர்மறை ஆற்றலை தடுக்கும். உடைந்த சாமி சிலைகளில் தெய்வம் தாங்காது என்றும் சாஸ்திரத்தில் கூறுவர். இவ்வாறான விஷயங்களை கவனித்து உடைந்தது, சேதமடைந்ததை நீக்கி புதிய படங்கள் / சிலைகளை வைக்கலாம்.

health tips

பாத்திரம்:

சமையல் அல்லது உணவு பரிமாற பயன்படுத்தப்படும் பாத்திரத்தில் விரிசல் இருந்தால், அதனை மாற்றுவது அல்லது. உடைந்த பாத்திரத்தில் சோறு / உணவு சமைத்து பரிமாறுவது அன்னபூரணியின் அருளை குறைக்கும். வீட்டில் அருளை உண்டாக்கும். 

தேய்ந்த துடைப்பம்:

சாஸ்திரத்தின்படி, துடைப்பம் தேய செல்வமும் கரையும். இதனால் துடைப்பம் உடைந்துபோகும் முன்னர் புதிய துடைப்பம் வாங்கி பயன்படுத்துவது நல்லது. பழைய துடைப்பத்தை வாசலில் படுத்த நிலையில் வைக்க கூடாது. இது மகாலட்சுமிக்கு அவமரியாதை செய்வதற்கு சமம் ஆகும். புதிய துடைப்பத்தை வாசலை அடைக்காத வண்ணம், மூலையில் வைக்க வேண்டும்.

பழைய கால்மிதி:

கிழிந்த / சேதமான கால்மிதியை மாற்றுவது நல்லது. இது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்பதால், புத்தாண்டில் புதியது பயன்படுத்துவது நல்லது. பழைய கால்மிதி புதிய வாய்ப்புகளை தடுக்கும். அதேபோல, செவ்வாய், வெள்ளிக்கிழமை தவிர்த்து பிற நாட்களில் இதனை செய்யலாம்.