திருமணமான பெண் வலதுகாலை எடுத்து வைத்து வீட்டினுள் வருவது ஏன்?..!

திருமணமான பெண் வலதுகாலை எடுத்து வைத்து வீட்டினுள் வருவது ஏன்?..!



New Marriage Girl Right Leg Enter House 

 

முன்னோர்கள் நமது வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு பல விஷயத்தை கற்று சென்றார்கள். அவர்களின் பல்வேறு வகையான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. 

திருமணமான புதிதில் மணப்பெண் முதல்முறையாக புகுந்த வீட்டிற்கு வரும்போது, வலது காலை எடுத்து வீட்டில் அடியெடுத்து வைத்து வரச் சொல்லி இருப்பார்கள். நமது பாதங்கள் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுவதால், பாதத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று கூறப்படுகிறது. 

Married girl

மகாலட்சுமி என்றாலே அழகு என்று பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறார். இயற்கை கொஞ்சுமிடத்திலும் மகாலட்சுமி வாழ்கிறார். திருமணமான மணப்பெண் புகுந்த வீட்டில் வரும்போது தலைவாசலில் நெல்லை வைத்து அதனை வலது காலால் வீட்டில் உட்புறம் தள்ளிவிடும் பழக்கம் இருக்கிறது. 

மணப்பெண்ணின் காலில் இருக்கும் நாராயணன், அன்னை மகாலட்சுமி ஆகியோர் நமது வீட்டிற்குள் வருவார்கள் என்று நம்பப்படுகிறது. இதனாலேயே புதிதாக திருமணமான மணப்பெண்ணை வலது கால் எடுத்து வைத்து வர கூறுகிறார்கள்.