லைப் ஸ்டைல்

ஒற்றை யானை செய்த தரமான சம்பவம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி..!

Summary:

Mysteries elephant throw waste into dustbin video

தரையில் கிடக்கும் குப்பைகளை எடுத்து, குப்பைத் தொட்டியில் போடும் யானையின் செயல் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மனிதர்கள் செய்யும் தவறுகளால் சுற்றுசூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகிறது.  சுற்றுசூழல் மாசுபாட்டால் மனித இனத்திற்கும், மற்ற உயிரினங்களுக்கும் பெரும் ஆபத்தை உண்டாக்கி வருகிறோம்.

பிளாஸ்டிக் போன்ற பொருட்களை சாப்பிட்டுவிட்டு பல்வேறு உயிரினங்கள் இறப்பதை நாம் கேள்வி பட்டிருப்போம். இதற்கு முக்கிய காரணம், சுற்றுப்புறத்தை நாம் தூய்மையாக வைத்துக்கொள்ளாததே. அரசங்காகும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகிறது.

இந்நிலையில் சுற்றுசூழல் மாசு பற்றி எதுவும் அறிந்திராத யானை ஓன்று  கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இந்த வீடியோ மிக பழையதாக இருந்தாலும் யானையின் இந்த செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.


Advertisement