உடல் எடையைக் சரசரவென குறைக்க வேண்டுமா? அப்போ காலையில் இந்த உணவை சாப்பிடுங்க! அப்பறம் பாருங்க ரிசல்ட்டை....!



morning-foods-for-weight-loss

உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு காலை உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான உணவுகளை தேர்வு செய்தால், எடை கட்டுப்பாட்டுடன் உடல் ஆரோக்கியமும் மேம்படும். தினமும் காலை உணவில் கவனம் செலுத்துவது நீண்டகால ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.

காலை உணவின் முக்கியத்துவம்

காலையில் சாப்பிடும் உணவு நாளின் முழு சக்தியையும் தீர்மானிக்கிறது. சீரான உணவுமுறை உடல் பருமன் பிரச்சனைகளைத் தடுக்கும். குறிப்பாக எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது.

Weight Loss Tips

முட்டை

புரதம் நிறைந்த முட்டையில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இது எடை இழப்பிற்கு சிறந்த உணவாகும். நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

இதையும் படிங்க: மாரடைப்புக்கு முக்கிய காரணமே கெட்ட கொழுப்பு தான்! அதிலிருந்து தப்பிக்க இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்க....

சியா விதை தண்ணீர்

வெறும் வயிற்றில் சியா விதை கலந்த தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது உடலில் தேவையான நார்ச்சத்தையும் வழங்குகிறது.

Weight Loss Tips

முளைத்த தானியங்கள்

புரதம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த முளைத்த தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்வது எடை கட்டுப்பாட்டிற்கு உதவும்.

பாதாம்

இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடல் மெட்டபாலிசத்தை தூண்டி, கொழுப்பு கரைய உதவுகிறது.

பழங்கள்

காலை வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தொப்பை கொழுப்பை குறைத்து, உடல் எடை கட்டுப்பாட்டை மேம்படுத்துகிறது.

உடல் எடை அதிகரிப்பின் பாதிப்புகள்

உடல் எடை அதிகரித்தால் நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், புற்றுநோய், சுவாசக் கோளாறு, கல்லீரல் மற்றும் மூட்டு பிரச்சனைகள், செரிமான சிக்கல்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.

எனவே, தினமும் சரியான காலை உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவதன் மூலம் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த முடியும்.

 

இதையும் படிங்க: இதயத்தில் ப்ளாக் வராமல் இருக்கணுமா! அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க! அதிலிருந்து தப்பிக்கலாம்...