இதுதான் குரங்கு சேட்டை.! சிவனேனு போன மான் மீது ஏறி குரங்கு செய்யும் காரியத்தை பாருங்கள்.! வைரல் வீடியோ.

இதுதான் குரங்கு சேட்டை.! சிவனேனு போன மான் மீது ஏறி குரங்கு செய்யும் காரியத்தை பாருங்கள்.! வைரல் வீடியோ.


Monkey takes a ride on deer back

குரங்கு என்றாலே சேட்டைதான். பலநேரங்களில் குரங்குகள் விளையாட்டாக செய்யும் சில செயல்கள் இணையத்தில் வைரலாகிவிடும். அந்தவகையில் இந்திய வனத்துறை  (ஐஎஃப்எஸ்) அதிகாரி சுசாந்தா நந்தா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

31 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் மான் மற்றும் குரங்குகள் கூட்டமாக உள்ள இடத்தில், குரங்கு ஓன்று மானின் முதுகில் ஏறி கூலாக சவாரி செய்கிறது. மானின் முதுகில் குரங்கு ஏறியதும் மான் புல்லை நோக்கி நடக்கத் தொடங்குகிறது, குரங்கு வசதியாக அதன் முதுகில் அமர்ந்துகொள்கிறது.

monkey

அந்த வீடியோவில் இன்னும் சில குரங்குகளும், மான்களும் காணப்படுகின்றன. சுவாரஸ்யமாக, மான் புல் சாப்பிடும்போது கூட குரங்கு கீழே இறங்கவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.