லைப் ஸ்டைல் வீடியோ

மொட்டை மாடியில் அமர்ந்து குரங்கு பார்த்த விநோத காரியம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Summary:

Monkey flying a kite video goes viral

ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். ஏதவது ஒன்றை செய்து தினம் தினம் தங்கள் பொழுதை கழித்துவரும் நிலையில், குரங்கு ஓன்று மாடியில் அமர்ந்து மனிதர்களை போல் பட்டம் விட்டு தனது பொழுதை கழிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசந்தா நந்தா அவர்கள் பதிவிட்டுல 12 வினாடி காட்சிகளில், மாடியின் உச்சியில் அமர்ந்திருக்கும் குரங்கு ஓன்று அங்கு பிறந்துகொண்டிருந்த பட்டம் ஒன்றை மனிதர்களை போல அழகாக நூலை பிடித்து மேலும் கீழுமாக இழுத்து அந்த பட்டத்தை கீழே இறங்குகிறது.

குரங்கின் இந்த செயலை பார்த்த சிலர் சத்தம் போட்டு கடத்திக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத குரங்கு, பட்டம் விடுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement