கோடை வெயிலை குளுமையாக்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும் மசாலா மோர் செய்வது எப்படி.!

கோடை வெயிலை குளுமையாக்கி உடலுக்கு குளிர்ச்சியை தரும் மசாலா மோர் செய்வது எப்படி.!


Masala moor recipe

ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால் தொண்டைக்கும் இதமாக குளிர்ச்சியாக எதையாவது ஒன்றை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் எழும். அந்த சமயத்தில் மசாலா மோர் குடித்தால் நல்லா இருக்கும். இப்போது மசாலா மோர் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

கெட்டித் தயிர் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
மோர் மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்

Masala moor

முதலில் பச்சை மிளகாய் - 1/2
கறிவேப்பிலை - 3 இலை
இஞ்சி - 1/4 இன்ச் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பின் தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ளதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான மசாலா மோர் ரெடி.