நாவில் எச்சில் ஊறவைக்கும் மசாலா மீன் குழம்பு.. ஒருமுறை இப்படி செய்து பாருங்க.!!



Masala fish gravy recipe

 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து ரசித்து உண்ணும் மசாலா மீன் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள்

மீன் - 1/2 கிலோ 

மிளகாய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்

சீரகத்தூள் - 4 டேபிள் ஸ்பூன் 

சின்ன வெங்காயம் - தேவையான அளவு 

மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் 

புளி - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டேபிள் ஸ்பூன் 

அரைத்த தேங்காய் - தேவையான அளவு 

சிவப்பு மிளகாய் - 3

Masala fish gravy

செய்முறை

முதலில் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு சேர்த்து சிவப்பு மிளகாய், கருவேப்பிலை உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

இதையும் படிங்க: அசத்தலான சுவையில் பெருமாள் கோவில் புளியோதரை.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!

அடுத்து சின்ன வெங்காயம் தேவையான அளவு சேர்த்து வதக்கி, வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.

பின் புளிக்கரைசலை தயார் செய்து அதில் சீரகத்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்று கரைக்க வேண்டும்.

அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து அந்த கலவையை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்ததும் கழுவி வைத்திருக்கும் மீனை சேர்த்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

இறுதியாக அரைத்து வைத்திருந்த தேங்காயை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் அசத்தலான மசாலா மீன் குழம்பு தயாராகிவிடும்.

இதையும் படிங்க: குட்டீஸ் விரும்பும் ரவா லட்டு; இல்லத்தரசிகளே இன்றே சுவைபட செய்து அசத்துங்கள்.!!