தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
அசத்தலான சுவையில் பெருமாள் கோவில் புளியோதரை.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!
பெருமாள் கோவில் புளியோதரை என்றால் பலருக்கும் பிடித்தமான புளியோதரைகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இன்று பெருமாள் கோவிலில் செய்யப்படும் புளியோதரை செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி சாதம் - 2 கப்
புளி - 1 எலுமிச்சை பழமளவு
நல்லெண்ணெய் - 3 கரண்டி
வேர்க்கடலை - 2 கரண்டி
கடுகு - 1/2 கரண்டி
கடலைப்பருப்பு - 1 கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கருவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 கரண்டி
நாட்டு சர்க்கரை - 1 கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பொடி செய்வதற்கு,
எண்ணெய் - 1 கரண்டி
கடலைப்பருப்பு - 2 கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 கரண்டி
மல்லி - 1/2 கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
வெந்தயம் - 1 கரண்டி
எள்ளு - 1 கரண்டி
செய்முறை
முதலில் பொடி அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து அதனை மிக்ஸியில் அரைத்து பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் எலுமிச்சை அளவுள்ள புளியை அரைக்கப் நீரில ஊற வைக்க வேண்டும்.
இதையும் படிங்க: குட்டீஸ் விரும்பும் ரவா லட்டு; இல்லத்தரசிகளே இன்றே சுவைபட செய்து அசத்துங்கள்.!!
மற்றொரு வானலில் நல்லெண்ணெய் ஊற்றி வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, பின் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
இதனுடன் பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து புளிச்சாறு ஊற்றி 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இறுதியாக நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் சமயத்தில் சாதத்தை சேர்த்து, பின் அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி 30 நிமிடங்கள் கழித்து பரிமாறினால் பெருமாள் கோவில் புளியோதரை தயார்.
இதையும் படிங்க: கோதுமை மாவில் சுவையான பஞ்சு போல இட்லி இப்படி செய்து பாருங்க.? குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.!?