லைப் ஸ்டைல் சமூகம்

சுவர் ஏறி குதித்து மனைவி மற்றும் மாமியாரை கொடூரமாக கொலை செய்த கணவர்; கோவையில் பரபரப்பு!

Summary:

man killed his wife and mother in law

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பாபு என்ற தச்சு தொழிலாளி தன்னுடைய மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி CTC காலனியில் தச்சுத் தொழிலாளியான பாபு என்பவருக்கும் சுமதி என்பவருக்கும்,  கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

தகராறு

இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதனால் மனைவி சுமதி பாபுவை விட்டுவிட்டு தனது தாயார் வீட்டில் சென்று வசித்துள்ளார். தாயார் பெயர் விசாலாட்சி. பாபு அடிக்கடி மாமியார் வீட்டிற்கு சென்று தன்னுடைய மனைவியை அழைத்து உள்ளார். ஆனால் அவர் வர மறுத்துள்ளார். மாமியார் விசாலாட்சியும் மகளை அனுப்பி வைக்கும் எண்ணத்தில் இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த பிரபு நேற்று முன்தினம் இரவு ஆள்நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து தனது மாமியார் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். அங்கு உறங்கிக் கொண்டிருந்த தன்னுடைய மனைவி சுமதி மற்றும் மாமியார் விசாலாட்சியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் அவர்கள் இறந்த பின்பு அதே வீட்டில் தானும் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

அடுத்த நாள் காலை விசாலாட்சியின் வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் அனைவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களின் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement