அயலி நாயகியின் அடுத்த படத்தின் ஆடியோ லான்ச்... இணையதளத்தில் ட்ரெண்டிங்கான க்யூட் வீடியோ.!
சுவையான வெங்காய துவையல் செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.!
சுவையான வெங்காய துவையல் செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.!

சப்பாத்தி, தோசை, சூடான சாதத்திற்கு உகந்த வெங்காய துவையல் இன்று செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 300 கிராம்,
காய்ந்த மிளகாய் - 4,
உளுந்தம்பருப்பு - 5 கரண்டி,
புளி - சிறிதளவு,
எண்ணெய் - 6 கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி எடுத்து கொள்ள வேண்டும். பின் வானெலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுந்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆற வைத்து, பின்னர் மிக்சியில் வதக்கிய வெங்காயம் மற்றும் புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்தால் வெங்காய துவையல் தயார்.
ஆட்டு உரல் வைத்திருப்போர் அதில் இட்டு துவையலை தயார் செய்தால் இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்கும்.