நாவில் எச்சில் ஊறவைக்கும் வாழைக்காய் வறுவல்..! இல்லத்தரசிகளே இன்றே செய்து அசத்துங்கள்..!!
அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் உதவும் வாழை மரத்தில் பல நன்மைகள் உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இன்று வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்று காணலாம்.
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 2
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி வெங்காயம் - 2
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5
சீரகம் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட வாழைக்காயின் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
★தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
★தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய வாழைக்காயை சேர்த்து தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
★வாழைக்காய் விரைவில் வெந்துவிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். வாழைக்காய் வெந்த பின்னர் அரைத்து வைத்த தேங்காய் உட்பட கலவையை போட்டு இரண்டு நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால் வாழைக்காய் வறுவல் தயார்.