சுவையான சுண்டல் பாசிப்பருப்பு செய்வது எப்படி?.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!

சுவையான சுண்டல் பாசிப்பருப்பு செய்வது எப்படி?.. வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.!


How to Prepare Sundal Pasiparupu

புரோட்டீன், கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் பாசிபருப்பில் நிறைந்துள்ளன. இதனை கர்ப்ப காலத்தில் பெண்கள் உட்கொண்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. சுவையான பாசிப்பருப்பு சுண்டல் செய்வது எப்படி என இன்று காணலாம்.

தேவையான பொருட்கள்: 

பாசிப்பருப்பு - 1 கிண்ணம், 
மஞ்சள் தூள் - அரை கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
தேங்காய் துருவல் - 2 கரண்டி,
பொடி செய்ய:

தனியா - 1 கையளவு,
இஞ்சி - சிறிதளவு,
எண்ணேய் - 1 கரண்டி,
கடுகு - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 2. 

செய்முறை: 

முதலில் எடுத்துக்கொண்ட பாசிப்பருப்பை வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர், பொடி செய்வதற்கு தேவையான பொருட்களை தண்ணீர் சேர்க்காமல் இடித்து வைக்க வேண்டும். 

பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பில்லை சேர்க்க வேண்டும். அதன்பின், வேகவைத்த பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், தேங்காய் துருவல், உப்பு என அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் கிளற வேண்டும்.

இறுதியாக பொடியை சேர்த்து 2 நிமிடம் கிளறி பரிமாறினால் சுவையான பாசிப்பருப்பு சுண்டல் தயார்.