சத்தான கேழ்வரகில் சுவையான அதிரசம் செய்வது எப்படி?.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்..!!

கேழ்வரகில் அதிகளவு கால்சியம் சத்து இருக்கிறது. இது உடலுக்கு பல நன்மைகளையளிக்கும் நிலையில், தீபாவளிக்கு வித்தியாசமான கேழ்வரகு அதிரசம் எப்படி செய்வது என்று காணலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 500 கிராம்
தேங்காய் துருவல் - இரண்டு தேக்கரண்டி
வெல்லம் - 250 கிராம்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் வெல்லத்தை பாகு காய்ச்சிகொள்ள வேண்டும்.
★ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு சேர்த்து அதனுடன் ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
★அந்த மாவில் பாகு காய்ச்சிய வெல்லத்தை ஊற்றி நன்கு கிளற வேண்டும்.
★அதை ஒருநாள் ஊறவிட்டு, மறுநாள் அதிரசமாக பிடித்து வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதிரசங்களை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் அதிரசம் தயார்.