தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் பூசணி கட்லெட் செய்வது எப்படி?..! இல்லத்தரசிகளே இன்றே செய்து அசத்துங்கள்..!!

வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருக்கும் பூசணியில் உணவுகளை நாம் தயாரித்து சாப்பிடலாம். இன்று பூசணிக்காயில் கட்லெட் செய்து சாப்பிடுவது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
துருவிய பூசணிக்காய் - 600 கிராம்
உருளைக்கிழங்கு - 2
சோளமாவு - 4 கரண்டி
அரிசி மாவு - 4 கரண்டி
மிளகாய்த்தூள் - 2 கரண்டி
மசாலா தூள் - தேவையான அளவு
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
எலுமிச்சை சாறு - 2 கரண்டி
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிபொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
★பின் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, மசித்து வைத்துக்கொள்ளவும். துருவிய பூசணிக்காயை எடுத்து நீர் தெளித்து இட்லி வேகவைப்பது போல் பத்து நிமிடம் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
★அடுத்து பாத்திரத்தில் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், மசாலாத்தூள், மிளகாய்த்தூள், அரிசி மாவு, சோள மாவு, எலுமிச்சை சாறு, உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கட்லெட்டுகளாக தனியே எடுத்து வைக்க வேண்டும்.
★இறுதியாக எண்ணெய் ஊற்றி சூடானதும், நாம் எடுத்து வைத்துள்ள கட்லெட்டுகளை பொன்னிறமாக பொரித்தெடுத்தால் சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார்.