சண்டே ஸ்பெசல்: குட்டீஸுக்கு பிடித்த பன்னீரில், சுவையான பன்னீர் 65 வீட்டிலேயே செய்யலாம். தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
பன்னீரில் நிறைந்துள்ள புரதசத்து நீரிழிவு நோயாளிகளுக்கு உதவி செய்கிறது. இன்றளவில் பன்னீரில் பல விதமான உணவுகள் உணவகத்தில் தயார் செய்து வழங்கப்படுகின்றன. அதனை நாம் வீட்டிலும் செய்து சாப்பிடலாம். இன்று பன்னீர் 65 செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 400 கிராம்,
இஞ்சி-பூண்டு விழுது - 2 கரண்டி,
மிளகாய் தூள் - 1 கரண்டி,
கரம் மசாலா - 1 கரண்டி,
மிளகுத்தூள் - 1 கரண்டி,
எலுமிச்சை சாறு - 2 கரண்டி,
தயிர் - 2 கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
★முதலில் பன்னீர் துண்டுகளை அதனோடு ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ளதை சேர்ந்து பிரட்டி எடுக்க வேண்டும். பின்னர், மற்றொரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை பொறிக்க நாம் தயார் செய்வதை போல இஞ்சி பூண்டு விழுது, மசாலா பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து மசாலா கரைசலை தயார் செய்ய வேண்டும்.
★இந்த கலவை தயாரானதும் சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு, பின்னர் பன்னீர் துண்டுகளை ஒன்றொன்றாக அதனுள் கலந்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும். 5 முதல் 10 நிமிடம் கடந்த பின்னர், இவற்றை சூடாக எண்ணெய் உள்ள வானெலியில் இட்டு பொறித்து எடுத்தால் சுவையான பன்னீர் 65 தயார்.