குழந்தைகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கும் கருப்பு உளுந்து வடை.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!!How to Prepare Karupu Uluntha Vadai

இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்த கருப்பு உளுந்து வடை எப்படி செய்வது என்று தற்போது காணலாம்.

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புசத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதால் ரத்தசோகை நோய் வராமல் தடுக்க இயலும்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - தேவைக்கேற்ப கருவேப்பிலை - சிறிதளவு 
உப்பு - தேவைக்கேற்ப 
வெண்ணெய் - 2 தேக்கரண்டி 
கருப்பு உளுந்து - 1 கப் 
மிளகு - 2தேக்கரண்டி 
இஞ்சி - சிறிய துண்டு

health tips

செய்முறை :

★முதலில் கருப்பு உளுந்தை வெறும் வாணலியில் நன்றாக வறுக்க வேண்டும்.

★பின் மிக்ஸியில் ரவை போன்று கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

★அதனுடன் துருவிய இஞ்சி, மிளகுபொடி, கருவேப்பிலை, வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

★பின் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

★இறுதியாக இதனை 15 நிமிடங்கள் ஊறவைத்து வடையாக தட்டி ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பொரித்து எடுத்தால் சுவையான கருப்பு உளுந்து வடை தயாராகிவிடும்.