வெயிலுக்கு இதமான இளநீர் பால் ஜீஸ்.. வீட்டிலேயே செய்வது எப்படி?..!!How to prepare Ilaneer milk juice in home

இளநீர் வெயில்காலத்தில் உடலுக்கு மிகவும் நல்லது. உடல் சூட்டை தணிக்கவும் உதவுகிறது. இன்று உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் பால் ஜூஸ் எப்படி செய்வது என்று காணலாம்.

தேவையான பொருட்கள் :

பொடியாக நறுக்கிய வழுகிய இளநீர் - தலா 100கிராம்

பால் - 200 கிராம்

நாட்டு சர்க்கரை - 4 தேக்கரண்டி

செய்முறை :

★முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாலை நன்றாக காய்ச்சி ஆறவைக்க வேண்டும்.

★பின் வழுகல் இளநீருடன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து பால் ஊற்றி, மீண்டும் ஒரு முறை மிக்ஸியில் அடித்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று குடிக்கலாம். 

★இது உடல்சூட்டை தடுக்கவும், வெயில்காலங்களில் உடலில் உண்டாகும் கட்டிகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.