என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
உடல் சூட்டை தணிக்கும் இளநீரில் இட்லி செய்வது எப்படி?..! இல்லத்தரசிகளே இதோ வழிமுறைகள்.!

இளநீர் இட்லி உடல் சூட்டை தணிக்கும் அருமருந்து ஆகும். இன்று இளநீர் இட்டலி செய்வது குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - ஒரு கிலோ,
உளுந்து - 1/4 கிலோ,
வெந்தயம் - 50,
இளநீர் - தேவையான அளவு,
உப்பு - சிறிதளவு.
செய்முறை:
முதலில் எடுத்துக் கொண்ட இட்லி அரிசி, வெந்தயம் ஆகியவற்றின் நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். உளுந்தை தனியே ஊற வைக்க வேண்டும்.
அரிசி வெந்தயத்தை கிரைண்டரில் இட்டு தண்ணீருக்கு பதில் இளநீரை சேர்த்து அரைக்க வேண்டும். உளுந்துக்கும் அதே முறையை பின்பற்றவும்.
இரண்டு மாவையும் ஒரே பாத்திரத்தில் இட்டு, உப்பு சேர்த்து இளநீர் கரைசலையும் சேர்த்து புளிக்க வைக்கலாம். பின் வழக்கம்போல இட்லி தட்டில் ஊற்றி எடுத்தால், சுவையான இளநீர் இட்லி தயார்.