தேங்காய் அல்வா எப்படி செய்வது எப்படி?.. சுவையாக செய்து அசத்தலாம் வாங்க..!

தேங்காய் அல்வா எப்படி செய்வது எப்படி?.. சுவையாக செய்து அசத்தலாம் வாங்க..!



How to Prepare Coconut Halwa Tamil

அனைவருக்கும் பிடித்த தேங்காய் அல்வா எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

தேவையான பொருட்கள் :

கொதிக்க வைத்து குளிர வைத்த பால் - ரெண்டரை கப் 
முந்திரி - தேவைக்கேற்ப 
நெய் - 5 தேக்கரண்டி 
சர்க்கரை - 7 தேக்கரண்டி 
துருவிய தேங்காய் - 2 கப்

செய்முறை :

★ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

★பின் துருவிய தேங்காயை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

★அடுத்து அதில் கொதிக்கவைத்து குளிரவைத்த பாலை ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

★பால் சுண்டி நீரின்றி போகும் நிலையில், சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இந்த கலவையானது கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறி இடையிடையே நெய் சேர்க்க வேண்டும். 

★இறுதியாக அல்வா திரண்டு வரும்போது வறுத்த முந்திரி, மீதமுள்ள நெய்யை சேர்த்து இறக்கினால் தேங்காய் அல்வா தயாராகிவிடும்.