ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
நார்ச்சத்து மிக்க கம்பு சாதம்.. வீட்டிலேயே 10 நிமிடத்தில் செய்வது எப்படி?.! மிஸ் பண்ணிடாதீங்க..!!
கம்பு சாதம் எப்படி செய்வது என்பது பற்றியதுதான் இந்த செய்திக்குறிப்பு.
கம்பில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது.
தேவையான பொருட்கள் :
கம்பு - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - 2 1/2 கப்
செய்முறை :
★முதலில் கம்பை நன்றாக கழுவி 1 கப் தண்ணீரில், 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
★பின் தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் நான்கு அல்லது ஐந்து முறை அரைத்தெடுக்கவும். உடைத்த ரவை போல் ஆகியதும் நிறுத்தவும்.
★உடைத்த கம்பை மீதமுள்ள தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில்கள் வைத்து எடுக்க வேண்டும்.
★இறுதியாக குக்கர் சூடு ஆறியபின், வெளியில் எடுத்து அரிசி வேக வைப்பதை விட சற்று அதிக நேரம் வேகவைத்தால் கம்பு சாதம் தயாராகிவிடும்.