என்னது வாழைப் பூவுல சப்பாத்தியா?!.. ஆச்சரியப்படாதீங்க வாங்க சுவையான வாழைப் பூ சப்பாத்தி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்..!

என்னது வாழைப் பூவுல சப்பாத்தியா?!.. ஆச்சரியப்படாதீங்க வாங்க சுவையான வாழைப் பூ சப்பாத்தி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்..!



How to make delicious banana flower chapati

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு கால் கிலோ, பாசிப்பருப்பு 5 டீஸ்பூன், நறுக்கிய வாழைப்பூ ஒரு கப், சின்ன வெங்காயம் – 7, பச்சைமிளகாய் – 1, பூண்டு - 2 பல், சீரகம் - 2 சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவையான அளவு, தயிர் - 2 டீஸ்பூன்

செய்முறை: வாழைப்பூவை நார் நீக்கி பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதனுடன் 5 டீஸ்பூன் பாசிப் பருப்பை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.

இதனுடன், தேவையான அளவு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வாணலியில் இட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். பின்பு சூடு ஆறியதும், மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

இந்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து, தயிர் மர்றும் உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாத்திக்கு மாவு பிசைவது போலவே பிசைந்து கொள்ளவும். அந்த மாவினை சப்பாத்தி கட்டையில் வைத்து உருட்டி சப்பாத்திகளாக சுடவும். இப்போது சுவையான வாழைப்பூ சப்பாத்தி தயார்.