நீங்கள் வாங்கும் தக்காளி நல்லதா? ரசாயனத்தால் பழுத்ததா? மக்களே தவறாம இதையெல்லாம் கவனிங்க.!



How to Identify Chemically Ripened Tomatoes: Key Signs Every Consumer Should Know

ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட தக்காளியின் தோல் கடினமாக இருக்கும். இதனை நாம் சரியாக கவனிக்க தவறினால் உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

இயற்கை இல்லை:

ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும், ஒவ்வொரு உணவுகளை சமைக்கும்போதும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது தக்காளி. இது உடல்நலத்துக்கு சத்துவழங்கும் காய்கறிகளில் முக்கியமானது ஆகும். சமீபகாலமாகவே ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட தக்காளிகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது பார்க்க சிவப்பு, பளபளப்பு நிறத்துடன் இருக்கும். ஆனால், இது உண்மையில் இயற்கையாக பழுத்தது இல்லை.

இதையும் படிங்க: எச்சரிக்கை.. அரிசியில் கலக்கப்படும் பிளாஸ்டிக்.. போலி அரிசியை கண்டுபிடிக்க எளிய டிப்ஸ் இதோ.!

health tips

மென்மையை கவனியுங்கள்:

சந்தேகிக்கும் வகையில் அதிகப்படியான ஜொலிப்பு, ஒரே மாதிரியான நிறத்தன்மை, அதிக கடினத்தன்மை இருக்கும் பட்சத்தில், அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டு இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர். இயற்கையான முறையில் பழுத்த தக்காளி கையில் எடுக்கும்போதே மேன்மை, லேசாக அழுத்தினாலும் தளர்வு ஆகியவற்றுடன் இருக்கும். ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்டது  ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்டது வெளியில் சிவந்த நிறத்துடன் இருந்தாலும், தோல் கடினமாக இருக்கும். இயற்கை மணம் இழந்தும் காணப்படும். 

அதேபோல, தக்காளியை வெட்டிப்பார்க்கும் போது உட்புறத்தில் நிறம் சமமாக இல்லாத பட்சத்தில் இயற்கையாக அது பழுத்ததற்கான அறிகுறி இல்லை. இயற்கையான தக்காளியில் விதைகளும் சீராக வளர்ந்து இருக்கும். ரசாயனத்தில் அதற்கு வாய்ப்பில்லை. இயற்கையாக பழுத்த தக்காளி நீரில் மூழ்கும் அல்லது கீழே தாங்கும். செயற்கை பெரும்பாலும் மிதக்க தொடங்கிவிடும்.
 

இதையும் படிங்க: மக்களே கவனம்.. சர்க்கரைவள்ளி கிழங்கில் ரசாயன கலப்படம்.. கண்டுபிடிப்பது எப்படி?