"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
மது அருந்திவிட்டு மணைவிக்கு தெரியாமல் டிமிக்கி கொடுக்கும் கணவனை எப்படி கண்டுபிடிப்பது?? பெண்களே உஷார்!!
தற்போதைய வாழ்க்கை முறையில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல இளைஞர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, அவர்களது வாழ்க்கையை சீரழித்து கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மதுவை ஒழிப்பதற்காக பெண்களும், பல அரசியல் தலைவர்களும் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் மதுக் கடையை அரசாங்கமே நடத்தி வருகிறது.
சிலர் வீட்டிற்கு தெரியாமலே இந்த பழக்கைத்தை வைத்துள்ளனர். திருமணமானவர்கள் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதற்கு யோசிப்பதே மனைவி மீது உள்ள பயம் தான். அதையும் தாண்டி சிலர், மனைவிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சமாளிக்கின்றனர். மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் கணவனை, அவர் மது அருந்தியுள்ளாரா என கண்டுபிடிக்க பல வழிகள் உள்ளது.
மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருபவர்கள், தான் குடித்த விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக சாக்லேட், பாக்கு, அதிகப்படியான வாசனை திரவியங்களை வீட்டிற்கு வரும்போது பயன்படுத்தி வருவார்கள்.
வழக்கமாக மனைவியுடன் நெருக்கமாகவே இருக்கும் கணவன், மது அருந்ததிய தினம் மட்டும் மனைவி அருகே செல்லாமல் சற்று விலகியே இருப்பார்கள்.
வழக்கமாக மனைவி பிடிக்காத ஒன்றை கூறினால், அதற்கு கோவப்படும் கணவன், மது அருந்திய தினம் மட்டும் மனைவி பிடிக்காத ஒன்றை கூறினால் அதனை கண்டுகொள்ளமாட்டார்கள்.
வழக்கமாக குழந்தை, துணைவியாருடன் பெட்ரூமில் தூங்குபவர்கள், ஹாலில் படுத்துக்கொள்கிறேன் என கூறி உறங்குவார்கள். உங்கள் கணவனின் செயல்களில் இதுபோன்ற நடவடிக்கை தெரிந்தால் அருகில் சென்று ஊத சொல்லுங்கள், பிறகு ஒருபோதும் கணவன் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வரமாட்டார்கள்.