மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தை பிறந்து எவளவு காலங்கள் கழித்து மனைவியுடன் உறவில் ஈடுபடலாம்? ஒரு பயனுள்ள டிப்ஸ்!

Summary:

How long should wait for sex after pregnancy

முதல் குழந்தை பிறந்ததும் அணைத்து தம்பதியினருக்கு மனதில் எழும் ஒரு கேள்விதான் அடுத்து எப்போ உடலுறவு கொள்வது. அதிலும், குறிப்பாக ஆண்களின் மனதில் இந்தக் கேள்வி கட்டாயமாக இடம்பெற்று இருக்கும்.

குழந்தை பிறந்ததும் உடனே மனைவியை எப்படி உடலுறவுக்கு அழைப்பது? இதை யாரிடம் கேட்பது? மனைவியிடம் இதை எப்படி வெளிப்படுத்துவது என்ற பல கேள்விகள் ஆண்களின் மனதில் தோன்றும்.

ஆண்களுக்கு தான் எல்லாம் அந்த மாதிரியான விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும் என்பது தவறான ஒன்று. ஏனென்றால் ஓர் ஆய்வில் ஆண்களை விட பெண்கள் தான் உடலுறவில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என தெரிவிக்கிறது.  

பிரசவத்தால் அவள் அனுபவித்த வலி தீர வேண்டும். பெண்களின் உடல் பழைய நிலைக்கு திரும்ப வேண்டாம்.  எனவே மேலும் சில காலம் ஆண்கள் பொறுத்து தான் ஆக வேண்டும். ஆனால், ஆண்களையும் இந்த விஷயத்தில் குறை கூற இயலாது; பெண்கள் மீதும் குற்றம் சுமத்த முடியாது.  


 
9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட  பெண்களின் மாதவிடாய் பிரசவத்திற்கு பின் வெளிப்படும். பொதுவாக 3-5 நாட்கள் நீடிக்கும் மாதவிடாய், இந்த சமயத்தில் மட்டும் 1 மாத காலம் நீடிக்கும் தொடர்ந்து பெண்களுக்கு  உதிரப்போக்கு ஏற்படும். குழந்தை பிறந்த நொடி முதல் தாய்ப்பால் உற்பத்தியும் பெண்ணின் உடலில் ஏற்பட ஆரம்பித்துவிடும். இந்த இரண்டுமே நீச்சு வாசம் அளிக்கக் கூடியவை. ஒன்று குழந்தைக்கு மிக முக்கியம்; மற்றோன்று பெண்ணின் உடல் இயக்கத்திற்கு மிக மிக முக்கியம். 

இந்த விஷயம் தெரிந்தும் நீங்கள் உடலுறவு கொள்ள முயன்றால், பெண்ணின் மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு இரண்டில் இருந்தும் வரும் நீச்சு வாடை, உடலுறவையே வெறுக்கும் மனநிலையை  உருவாகும்.  இதை மீறி ஆண்கள் உடலுறவில் ஈடுபட்டால், அது குழந்தைக்கும் உங்கள் மனைவிக்கும் ஆபத்தாக முடியும். 

எனவே, பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் முழுமையாக குணமடைய 3 முதல் 4 மாதங்கள் ஆகலாம். ஆனால், மருத்துவ ரீதியாக தையல் காயம் சரி ஆவதற்கு  4-6 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்  என்றும், அந்த காலகட்டத்தில் பெண்கள் முழுநேர ஓய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

கணவனும் மனைவியும் பிரசவத்திற்கு பின் உங்கள் ஒட்டுமொத்த காதலை, நீங்கள் பெற்று எடுத்த குழந்தை 3-4 மாதங்கள் முழுவதுமாக அளித்து, பின்னர் நீங்கள் காதலுக்குள் விழ தயாராகுங்கள். அது தான் மிகவும் சிறந்த செயல் பெண்கள் ஆசையை ஆண்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். 


Advertisement