AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
பிரிட்ஜில் சிக்கன், மட்டன் சேமிக்கலாமா?.. எத்தனை நாள் வரை கெடாமல் இருக்கும்?.. இந்த விஷயத்தை நோட் பண்ணுங்க.!
பிரிட்ஜில் சிக்கன், மீன், மட்டன் போன்ற இறைச்சிகளை எத்தனை நாள் பாதுகாப்பாக சேமிக்கலாம்? என இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.
இன்றளவில் பிரிட்ஜ் உள்ள அனைத்து வீட்டிலும் உணவுப்பொருட்களை சேகரித்து பின் மறுநாள் சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பிரிட்ஜில் சிக்கன், மீன், மட்டன் போன்றவற்றை எத்தனை நாள் வைக்கலாம்? என்பது பலருக்கும் சந்தேகமாக இருக்கிறது. இறைச்சியை முழுமையாக சேகரிக்க தவறும் பட்சத்தில் அதில் உருவாகும் பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு பல்வேறு நோயை ஏற்படுத்தும்.
ப்ரிட்ஜில் இறைச்சி சேமிக்கும் முறை:
சமைக்காத சிக்கனை பிரிட்ஜில் 1 நாள் முதல் 2 நாட்கள் வரை வைக்கலாம். இதனை காற்று புகாத பாத்திரத்தில் அடைத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். சமைத்த சிக்கனை 3 முதல் 4 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். இதனை பிரிட்ஜில் இருந்து எடுத்து உடனே சூடேற்றி சாப்பிடாமல் சற்று நேரம் வெளியில் வைத்து பின் சூடுபடுத்தி சாப்பிட வேண்டும்.
இதையும் படிங்க: ஆபத்தில்லாத இயற்கை முறையில் கொசுவை விரட்ட.. செம்ம ஐடியா.! இப்போதே ட்ரை பண்ணுங்க.!
மீன் வேகமாக கெடும் வாய்ப்பு அதிகம்:
அதேபோல சமைக்காத மீன் மிக வேகமாக கெட்டுப்போகும் என்பதால் அதனை 1 நாள் மட்டுமே வைத்திருக்கலாம். சமைத்த மீனை 3 முதல் 4 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். மட்டனை பொறுத்தவரையில் அதனை 3 முதல் 5 நாட்கள் வரை பிரிட்ஜில் சேமித்து பயன்படுத்தலாம். சமைத்த மட்டனை 4 நாட்கள் வரை சேமித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ப்ரீசரில் எத்தனை நாட்கள் வைக்கலாம்?
ஃப்ரீசரில் சிக்கனை மாத கணக்கிலும் வைத்து உபயோகிக்கலாம். மீன் ஆறு மாதங்கள் வரையிலும், மட்டனை ஆறு மாதங்கள் வரையிலும் வைத்து பயன்படுத்தலாம். என்னதான் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகித்தாலும் இறைச்சியை வாங்கி வந்தவுடன் சமைத்து சாப்பிடுவது தான் உடலுக்கு சத்துக்கள் கிடைக்க வழிவகுக்கும்.
இந்த விஷயத்தில் கவனம்:
அன்றாடம் சமைக்க தேவையான அளவு இறைச்சியை வாங்கி வந்து 1 அல்லது 2 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவு புரோட்டின், வைட்டமின்கள் நமது உடலுக்கு சென்றடையும். நேரமில்லாத பட்சத்தில் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
இதையும் படிங்க: பிசைந்த கோதுமை மாவை ஃப்ரிட்ஜில் வைப்பது சரியா?.. கவனம் மக்களே.!