AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
பிசைந்த கோதுமை மாவை ஃப்ரிட்ஜில் வைப்பது சரியா?.. கவனம் மக்களே.!
சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் அதிக நேரம் வைப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். வாயுத்தொல்லை, வயிறு உப்புசம், பாக்டீரியா அதிகரிப்பு, சத்துக்களின் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
பல வீடுகளில் இட்லி, தோசைக்கு அடுத்தபடியாக பலரும் விரும்பும் ஒரு உணவாக சப்பாத்தி இருக்கிறது. ஆனால் சப்பாத்தி தயாரிப்பின் போது கோதுமை மாவு பிசைய பலரும் அவதிப்படுவது உண்டு. இதனால் மாவை அதிகமாக சேர்த்து பிசைந்து பிரிட்ஜில் வைத்து மறுநாள் உபயோகம் செய்யும் பழக்கமும் இருக்கிறது. அதிலும் ஒரு சிலர் ஒரு வாரத்திற்கு சேர்த்து மாவு பிசைந்து வைத்து பயன்படுத்துகின்றனர். சப்பாத்தி மாவை முன்னதாகவே பிசைந்து ஃப்ரிட்ஜில் வைப்பதால் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு, ஆர்கானிக் அமிலம் சேர்ந்து மாவின் புளிப்பு சுவை அதிகரிக்கும்.
பிரிட்ஜில் கோதுமை மாவினை பிசைந்து வைக்கலாமா?
இந்த மாவு முந்தைய நிலையில் இருக்காது என்பதால் அதனை சாப்பிடும் போது வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் பாக்டீரியா உடலில் அதிகரிக்கும் சூழலும் உண்டாகும். பிசைந்த சப்பாத்தி மாவை 24 மணி நேரத்திற்கு அதிகமாக வைப்பது, பின் அதனை சமைத்து சாப்பிடுவது நல்லதல்ல. சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் அதிகம் வைத்து பயன்படுத்தினால் அதில் உள்ள வைட்டமின்கள், மினரல் போன்ற சத்துக்கள் சிதைந்து விடும். இதனால் அதனை சாப்பிட்டால் எந்த விதமான நன்மையும் உடலுக்கு கிடைக்காது. அதே நேரத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

சப்பாத்திக்கு மாற்று:
கோதுமை மாவு பிசைய நேரமெடுக்கும் என யோசிக்கும் பட்சத்தில் மாவை கரைத்து கோதுமை தோசையாக ஊற்றி சாப்பிடலாம். பலரும் சப்பாத்தி சாப்பிட்டால் மட்டுமே உடலுக்கு நல்லது. கோதுமை தோசையாக ஊற்றினால் அது நல்லதல்ல என நினைப்பார்கள். உண்மையில் கோதுமை தோசை, சப்பாத்தி இரண்டிலும் ஒரே அளவு சத்துதான் உடலுக்கு கிடைக்கிறது. கோதுமை தோசையுடன் வெங்காயம், கேரட் உள்ளிட்டவைகளை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து அடையாகவும் சுட்டு சாப்பிடலாம். இது உடலுக்கு காய்கறியில் இருந்து கிடைக்கும் பைபர் சத்துக்கள் கிடைக்க வழிவகுக்கும்.
உடல்நலனில் கவனம்:
சப்பாத்தி சுடும் போது அதற்கு ஏற்றது போல சாம்பார், கிரேவி, பொரியல் உள்ளிட்டவைகளை தனியாக செய்ய வேண்டி இருக்கும். ஆனால் கோதுமை தோசை செய்யும் போது அதனுடனே காய்கறிகளை சேர்த்து சுட்டுவிடலாம். ஃப்ரிட்ஜில் கோதுமை மாவு பிசைந்து வைப்பது உடலுக்கு நல்லதல்ல. அதற்கு மாற்றாக இப்படி செய்து சாப்பிடுவதால் உடல்நல கோளாறுகள் ஏற்படுவதை குறைக்கலாம்.