தேனில் சின்ன வெங்காயத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா.?

தேனில் சின்ன வெங்காயத்தை ஊற வைத்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா.?



Honey and small onion benefits

பொதுவாகவே நம் வீட்டு சமையலறையில் இருக்கும் பல பொருட்கள் நம் உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் மருந்தாகவே இருந்து வருகின்றது. நம் முன்னோர் காலத்தில் பாட்டி வைத்தியத்தின் முறையில் பல நோய்களை குறிப்பிட்ட பொருட்களை வைத்து மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

Cold

அந்த வரிசையில் தேன் மற்றும் சின்ன வெங்காயம் பல நோய்களை தீர்க்கும் மருந்தாக இன்று வரை இருக்கிறது. மேலும் தேனில் சின்ன வெங்காயத்தை ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் நோய்களை தடுக்கலாம்.

அவை என்னென்ன நோய்கள் என்று பார்க்கலாம் வாங்க

தேனில் சின்ன வெங்காயத்தை இரவில்  ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான சக்தி போன்றவைகளை அதிகரிக்கிறது.

Cold

தூக்கமின்மை ,நெஞ்சு சளி, இருமல் போன்றவற்றை குறைக்கிறது. மேலும் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை கரைத்து கொலஸ்ட்ரால் பிரச்சினை ஏற்படாமல் தடுத்து வருகிறது.